1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actor arjun explanation about daughter remours

என் மகள் பத்தி தப்பா பேசினா சும்மா இருக்கமாட்டேன்.. அர்ஜூன் ஆவேசம்...

arjun daughter
நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து கடந்த 2024ம் வருடம் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், சமீபத்தில் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் வெளிநாட்டில் நடந்த போது அந்த விழாவில் ஐஸ்வர்யா கலந்து கொண்டார். ஆனால், அவரின் கணவர் உமாபதி கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து ஐஸ்வர்யாவும், உமாபதியும் பிரிந்து விட்டனர். வீட்டிலேயே ஐஸ்வர்யா மது அருந்தியால் உமாபதிக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டதாக யுடியூப்பில் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட சிலர் பேசினார்கள்..

இந்நிலையில், இந்த வதந்திகளை மறுத்துள்ள நடிகர் அர்ஜுன் ‘எனது இளைய மகளின் திருமணத்தின்போது எனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு யூகங்களும் விவாதங்களும் எழுந்தன. அவரது தனிப்பட்ட விஷயங்களை தலையிடாமல் அவரின்ள் தனி உரிமை மதித்து, அதுபற்றி கருத்து தெரிவிப்பதை நான் திட்டமிட்டே தவிர்த்து வந்தேன்.

ஆனால், ஒரு தந்தையாக எனது மகளையும், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் குறிவைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதை பார்த்துக் கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது. என் மகளைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்பினால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பேன்’ என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
எங்களுக்கு அதிக ஷேர் வேணும்!.. ஓம் படம் ரிலீஸ் ஆகுமா?...