1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. ilayaraja appreciated dorathy movie

டோரதி செம படம்!.. இளையராஜாவிடமே பாராட்டை வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்...

dorathy
பீட்சா திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். அதன்பின் அவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது. அதன்பின் இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான் உள்ளிட்ட பல படங்களையும் அவர் இயக்கிவிட்டார்.

தற்போது டோரதி என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த திரைப்படம் இன்னமும் தியேட்டரில் வெளியாகவில்லை. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இளையராஜா இசையில் இந்த படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது..

பல உலக சினிமா விழாக்களில் டோரதி திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் படத்தை பார்த்த இளையராஜா கார்த்திக் சுப்பராஜை பாராட்டியிருக்கிறாராம். நீங்கள் மிகவும் நேர்த்தியான ஒரு படத்தை இயக்கி இருக்கிறீர்கள்.. நீங்கள் கையாண்ட விஷயத்தை பற்றி மிகவும் ஆழமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறீர்கள். நான் பல படங்களில் பணியாற்றியிருப்பதால் இதன் சிக்கல் பற்றி எனக்கு தெரியும்.. அதை நீங்கள் மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறீர்கள்.. உண்மையிலேயே பாராட்டுக்குரியது’ என பாராட்டி வாழ்த்தினாராம்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
'மொத ராத்திரி' படத்தை இன்று எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.. ஆனால் ஒரு வருடத்திற்கு முன் என்ன நடந்தது தெரியுமா? இயக்குனர்