1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. england women left lawer work and choosed dog walking

நாய்களுக்கு வாக்கிங்!.. தினமும் ரூ.50 ஆயிரம் வருமானம்!.. இங்கிலாந்தில் கலக்கும் பெண்...

england
இங்கிலாந்தில் வழக்கறிஞர் வேலையை விட்டுவிட்டு நாய்களை நடை பயிற்சி கூட்டி செல்லும் வேலையை முழு நேரமாக செய்து ஒரு பெண் தினமும் இந்திய மதிப்பில் ரூ.50 ஆயிரம் அளவுக்கு சம்பாதித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது
.
வழக்கறிஞர் தொழிலில் இருந்த லிஸ் என்கிற பெண் மனஅழுத்தம் காரணமாக அதை விட்டுவிட்டு ஒரு அமைதியான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அவர் முடிவு செய்தார். அப்போதுதான் அவருக்கு இந்த ஐடியா வந்திருக்கிறது.

தினமும் 20 முதல் 30 நாய்களை வாக்கிங் கூட்டிச் செல்லும் லிஸ் ஒரு நாய்க்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1800 கட்டணமாக வசூலிக்கிறார். இதன் மூலம் அவரின் தினசரி வருமானம் சுமார் இந்திய மதிப்பில் ரூ.38,500 முதல் ரூ.51,400 வரை அவர் சம்பாதிக்கிறாராம். அதாவது, நாய்களை வாக்கிங் கூட்டி சென்று இந்திய மதிப்பில் ரூ.15 லட்சம் வரை அவர் சம்பாதிப்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அக்டோபர் 2ம் தேதி முதல் மகளிருக்கு கட்டணமில்லா பயணம்!.. முதல்வர் விஜய் துவங்கி வைப்பு!...