1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. dadasaheb phalke award announced to dhurandhar

2026-க்கான விருதுகள் அறிவிப்பு.. துரந்தர் படத்துக்கு தாதாசாகேப் பால்கே விருது..

dhurandhar
ஒரு இந்திய உளவாளி பாகிஸ்தானுக்கு சென்று அங்கு செயல்படுவதை துரந்தர் என்கிற தலைப்பில் பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் படமாக எடுத்திருந்தார். இந்த படத்தின் முதல் பாகம் 2025ம்  வருடம் வெளியானது. அதைத் தொடர்ந்து சில மாதங்களிலேயே துரந்தர் 2 திரைப்படமும் வெளியாகி வசூலை அள்ளியது
.
இந்த படத்தின் முதல் பாகம் ரூ.1350 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாம் பாகம் ரூ.1800 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது

இந்நிலையில் 2026ம் வருடத்திற்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருது துரந்தர் திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விமர்சகர்களின் சிறந்த திரைப்படம் பிரிவில் காந்தாரா அத்தியாயம் 1 திரைப்படத்திற்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நடிப்புக்கு குவியும் பாராட்டு... ஆனால் பாக்ஸ் ஆபிஸில் சறுக்கியதா விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி ?