1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. AR Rahman Reveals He Rejected Over 10 Films to Focus on Ramayana Soundtrack

‘ராமாயணா’ படத்திற்காக 12 திரைப்படங்களை நிராகரித்தேன்: ஏஆர் ரஹ்மான்

rahman
நிடேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ‘ராமாயணா’ திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஸிம்மர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தின் இசை பணிகளுக்காக தான் சுமார் 10 முதல் 12 பெரிய திரைப்படங்களை நிராகரித்ததாக ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
 
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளாக இப்படத்தின் இசையில் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும், குறிப்பாக ‘ராவண தாண்டவம்’ பாடலுக்கு மட்டும் 12 முதல் 13 வெர்ஷன்கள் உருவாக்கப்பட்டு, அனைவருக்கும் பிடித்த இறுதி வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
 
அரிஜித் சிங், ஸ்ரேயா கோஷல் குரலில் ‘ஜெய் ஜெய் ராம்’ மற்றும் ஏ.ஆர். அமீன் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ள இப்படத்தின் இசை, ஒருபுறம் வரவேற்பை பெற்றாலும், ‘ராவண தாண்டவம்’ மற்றும் ‘மங்கல் ரங்’ ஆகிய பாடல்கள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் சந்தித்துள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஆன்மீக குரு சத்குருவின் காலில் விழுந்த நடிகை தமன்னா.. வைரல் புகைப்படம்...