வெற்றிமாறன் வேணாம்!.. வெயிட் பண்ண முடியாது!.. சூர்யாவின் படத்தை இயக்கும் அந்த இயக்குனர்!...
suriya
நடிகர் சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாக ஹிட் படங்கள் அமையாத நிலையில் கருப்பு படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த திரைப்படம் உலகமெங்கும் 340 கோடி வரை வசூல் செய்தது. இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தில் விஜய் நடித்த ஜனநாயகனை விட கருப்பு திரைப்படம் அதிக வசூலை பெற்று சாதனை படைத்து விட்டது.
ஒருபக்கம் அவரின் 50வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்றெல்லாம் சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான் சூரியை வைத்து மண்டாடி திரைப்படத்தை இயக்கி வரும் மதிமாறன் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம். சமீபத்தில் இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவிருக்கிறார்.
கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவை வைத்து வெற்றிமாறன் வாடிவாசல் என்கிற படம் அறிவிப்பு வெளியானதோடு நின்றுவிட்டது. அந்த படத்திற்காக தாணு சூர்யாவுக்கு சில கோடிகள் அட்வான்ஸும் கொடுத்திருந்தார். ஆனால், அது பல வருடமாகியும் நடக்கவில்லை. எனவேதான், மண்டாடி பட இயக்குனர் மதிமாறனை வைத்து வேறு படத்தை தாணு துவங்கப்போகிறார் என சொல்கிறார்கள். இது சூர்யாவின் 50-வது திரைப்படமா அமையுமா என்பது தெரியவில்லை
