1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India Post Launches 24/7 Prasadam Booking Counter at Sabarimala

சபரிமலையில் 24 மணி நேர அஞ்சல் சேவை.. பிரசாதம் பார்சல் சேவை தொடக்கம்...

சபரிமலை
கேரள மாநிலம் சபரிமலையில் அஞ்சல் துறை சார்பில் '24/7 சுவாமி பிரசாதம்' முன்பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது. 
 
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இந்திய அஞ்சல் துறை சார்பில் பிரசாதம் பார்சல் சேவை கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் சபரிமலையிலேயே பிரசாதங்களை எளிதாக முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
 
இந்த முன்பதிவு மையத்தில் பக்தர்கள் ஆர்டர் செய்தால், சுவாமிக்கு உகந்த அப்பம் மற்றும் அரவணை பிரசாதங்கள் விரைவு அஞ்சல் சேவை மூலம் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் தாங்களே பிரசாதங்களைக் கைகளில் சுமந்து செல்ல வேண்டிய அலைச்சல் குறையும். 
 
மேலும், சபரிமலைக்கு வர முடியாத பக்தர்களும் தங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் இந்த மையத்தில் முன்பதிவு செய்து பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ள இது மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும். 24 மணி நேரமும் செயல்படும் இந்தச் சேவை பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஆதி திராவிடர் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்.. புது விதி அமல்.. ! மாணவர்கள் உடனே என்ன செய்ய வேண்டும்?