1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. soori mandaadi movie collected more tha sardar 2

சர்தார் 2-வை தாண்டிய மண்டாடி!.. கெத்து காட்டும் சூரி!...

mandaadi
கடந்த 15 வருடங்களுக்கும் மேல் பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் சூரி. சிவகார்த்திகேயனுன் சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் அவருக்கு முக்கிய படங்களாக அமைந்தன. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்கிற படம் மூலம் கதையின் நாயகனாக சூரி நடிக்க துவங்கினார்.  

அதன்பின் கருடன், மாமன் போன்ற படங்களில் சூரி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது. தற்போது சூரியின் நடிப்பில் மண்டாடி படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் 4 நாட்களில் 49 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.

அதேநேரம், பல வருடங்களாக ஹீரோவாக நடித்து வரும் கார்த்தியின் சர்தார் 2 படம் மண்டாடி படத்துக்கு போட்டியாக வெளியானது. ஆனால், அந்த படம் 4 நாட்களில் வெறும் 18 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. அதாவது, சர்தார் 2-வை விட மண்டாடி அதிக வசூலை பெற்றிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
விஜய், அஜித்தை வச்சி தனக்குத்தானே ஆப்படித்துக்கொண்ட திமுக!.. புளூசட்ட மாறன் டிவிட்!...