18 - 20 சதவீதம் குறைந்த மொபைல் விற்பனை!.. தீபாவளி ஆஃபரும் கை கொடுக்கலயே!...
தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது. படிப்பறிவு இல்லாதவர்கள் கூட இண்டர்நெட் வசதியுடன் கூடிய செல்போனை வைத்திருக்கிறார்கள். ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்,யுடியூப் போன்ற சமூகவலைத்தளங்களை அதிகமானோர் பயன்படுத்துகிறர்கள். பெரும்பாலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போனைத்தான் நடுத்தர வசதி கொண்ட மக்களும் பயன்படுத்துகிறார்கள்.
இதைப்பயன்படுத்தி பல செல்போன் நிறுவனங்களும் குறைந்த விலையில் செல்போன் விற்பனை செய்வதாக விளம்பரங்கள் செய்து வருகின்றன. அதுவும் புது வருடம், பொங்கல், தமிழ் புத்தாண்டு, ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை காலங்களில் நிறைய சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன. அதைத்தொடர்ந்து பலரும் புதிய செல்போனை வாங்குவதுண்டு.
ஆனால், 2026 தீபாவளியை பொறுத்தவரை தீபாவளியன்று நேரடி விற்பனை கடந்த வருடத்தை ஒப்பிடும்போது 18 முதல் 20 சதவீதம் வரை மொபைல் விற்பனை சரிந்ததாக AIMRA தெரிவித்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் வருகை சீராக இருந்தாலும் விலை உயர்வு காரணமக பெரும்பாலானோர் மொபைல் போன்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது.