1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Ravi Shastri Backs Anshul Kamboj as India's Workhorse for Upcoming Test Series Against New Zealand

டெஸ்ட் போட்டிக்கு இந்த பவுலர் அணிக்கு நிச்சயம் தேவை: ரவிசாஸ்திரி கருத்து...

இந்தியா vs நியூசிலாந்து
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 4-வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
 
இந்த ஒருநாள் தொடர் முடிந்தவுடன், வரும் நவம்பர் 19-ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணியின் விளையாடும் 11 பேர் கொண்ட பட்டியல் குறித்து முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
 
குறிப்பாக, இளம் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜை ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டியுள்ளார். "அன்ஷுல் கம்போஜ் சிறப்பாக பேட்டிங்கும் செய்யக்கூடியவர். நியூசிலாந்து போன்ற காற்று வீசும் சவாலான சூழல்களில் 15 ஓவர்களுக்கு மேல் தொடர்ந்து வீசி, ஒரு முனையை இறுக்கமாக பிடித்துக் கொள்ளக்கூடிய உழைப்பாளி பந்துவீச்சாளராக அவர் திகழ்வார். 
 
நடு ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் கொண்ட வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்குத் தேவை," என்று தளத்தில் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஒரே இன்னிங்ஸில் 5 பேர் அரைசதம்.. பேட்டிங்கில் அசத்திய பாகிஸ்தான்.. பதிலடி கொடுக்குமா இலங்கை?