1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. oracle lay off its employees informed in email

மீண்டும் மீண்டுமா!.. AI தாக்கம் எதிரொலி!.. ஊழியர்களை தூக்கிய Oracle!...

oracle
கடந்த சில வருடங்களாகவே AI என்கிற தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரீதமாக வளர்ந்திருக்கிறது. இப்போதுள்ள பொறியியல் மாணவ, மாணவிகள் AI தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ளவில்லை என்றால் மென்பொருள்(Software) துறையில் வேலைவாய்ப்பு கிடைக்காது என்கிற நிலை உருவாகியிருக்கிறது.

மென்பொருள் துறையில் மனிதர்களை விட AI மிகவும் வேகமாக Coding-ஐ எழுதிக் கொடுத்து விடுவதால் மென்பொருள் துறையில் மனிதர்களுக்கான வேலை வாய்ப்பு குறையும் என கணிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் நிறைய பேர் தங்களின் வேலையை இழப்பார்கள் என அஞ்சப்படுகிறது.

ஏற்கனவே பல நிறுவனங்கள்  AI பயன்பாடு காரணமாக ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி வரும் நிலையில் தற்போது ORACLE நிறுவனமும் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்ய துவங்கியிருக்கிறது.

ஏற்கனவே கடந்த மே மாதம் 31ம் தேதி 21 ஆயிரம் ஊழியர்களை நிறுவனம் ORACLE பணி நீக்கம் செய்திருந்தது. இந்நிலையில்தான் சமீபத்தில் காலை 6 மணிக்கு மேல் அனுப்பி ‘நீங்கள் இனிமேல் பணிக்கு வர வேண்டாம்’ என ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. ORACLE நிறுவனத்தில் AI புகுத்துவதன் ஒரு பகுதியாகவே மீண்டும் பணி நீக்கம் செய்வதாக ORACLE அறிவித்திருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
15 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..