இந்தியா பொருளாதார பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. சொந்த நாட்டையே மட்டமாக பேசிய ராகுல் காந்தி..
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "இந்தியா மிகப்பெரிய பொருளாதார பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது" என்று விமர்சித்துள்ளார். வேலையின்மை மற்றும் கல்வி முறை சீர்குலைந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராகுலின் இந்தக் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் எடுபடாததால் வெளிநாடுகளுக்கு சென்று நாட்டின் பெயரை கெடுப்பதாக பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ள நிலையில், ராகுல் காந்தி தொடர்ந்து அவதூறு பரப்புவதாக பாஜக தேசிய பேச்சாளர் பிரதீப் பண்டாரி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அமைச்சர் திலீப் கோஷும் ராகுல் காந்தியை விமர்சித்து, இந்தியாவில் யாரும் அவருக்கு மதிப்பளிக்காததால்தான் வெளிநாடுகளில் குறை கூறுவதாக தெரிவித்தார். நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் ஜிடிபி வளர்ச்சி உலகிற்கு முன்னுதாரணமாக உள்ளதாகவும், அதிகார வெறி பிடித்தவர்களுக்கே நாட்டின் வளர்ச்சி கண்ணுக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
பிரதமர் மோடி எப்போது வெளிநாடு சென்றாலும் இந்தியாவின் தேசிய நலனை காத்து வருவதாக பாஜக தரப்பில் பெருமிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் இந்தக் கருத்து இந்திய அரசியலில் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

