1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. instagram user can replace the audio in the post

இன்ஸ்டாவில் ஆடியோவை மாற்றும் புதிய வசதி!.. இனிமே டெலிட் பண்ண தேவையில்ல!...

instagram
உலகமெங்கும் உள்ள மக்களில் பெரும்பாலானோர் மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். அதில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிர முடியும்.
இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு பணம் சம்பாதிப்பவர்களும் நிறைய இருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் இதையே தங்களின் முழு நேர வருமானமாகவும் பலரும் கொண்டிருக்கிறார்கள். இப்போதெல்லாம் 10 வயது முதல் பலரும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்கள் அதிக அளவில் இன்ஸ்டாகிராம் ஆப்பை பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில்தான், இன்ஸ்டாகிராமில் பழைய பதிவுகளில் ஆடியோவை Replace செய்யும் அம்சத்தை Meta நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் போஸ்டை நீக்காமல் ஆடியோவை மட்டும் மாற்றிக் கொள்ள முடியும். இது இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

இதற்கு முன்பெல்லாம் ஏற்கனவே பதிவிட்ட போஸ்ட்களில் ஆடியோவை மாற்ற முடியாது.. டெலிட் செய்து விட்டு புதிதாகத்தான் பதிவிட வேண்டும் என்கிற நிலையில்தான் தற்போது இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... બધા વાંચો
அடுத்த கட்டுரையில்
நீட் தேர்வு போராட்டம்!.. நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ!...