சென்னை மாஸ்டர் பிளானில் முக்கிய மாற்றம்! பூந்தமல்லி அருகே உள்ள மக்களுக்கு செம்ம ஜாக்பாட்...
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வெளியிட்டிருக்கும் புதிய மாஸ்டர் பிளான் மாற்றத்தால் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டத்தில் உள்ள நொச்சிமேடு கிராம நில உரிமையாளர்களுக்கு மிகப் பெரிய ஜாக்பாட் கிடைத்துள்ளது. அதன்படி, அங்கு இதுவரை 'நகர்ப்புறமல்லாத பயன்பாட்டு மண்டலமாக' இருந்த குறிப்பிட்ட நிலங்கள், தற்போது அதிகாரப்பூர்வமாக 'குடியிருப்பு பயன்பாட்டு மண்டலமாக' மாற்றப்பட்டுள்ளன.
நொச்சிமேடு கிராமத்தில் உள்ள சர்வே எண்கள் 113 மற்றும் 114-க்கு உட்பட்ட இந்த நிலங்களில், இனி பொதுமக்கள் எளிதில் CMDA ஒப்புதல் பெற்று வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொள்ள முடியும். இதனால் அந்தப் பகுதியில் உள்ள சொத்துகளின் சந்தை மதிப்பும் பலமடங்கு உயர்ந்துள்ளது. அதேசமயம், அங்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளும்போது சுற்றியுள்ள காலி நிலங்களுக்குச் செல்லும் பொதுப் பாதையை எக்காரணம் கொண்டும் அடைக்கக் கூடாது என்ற முக்கியமான நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அசத்தலான மாற்றமானது அப்பகுதி நில உரிமையாளர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதுடன், எதிர்காலத்தில் அங்கு புதிய குடியிருப்புப் பகுதிகள் வேகமாக உருவாக வழிவகை செய்துள்ளது.

