அமெரிக்க படைகள் மீது தாக்குதல்.. ஈரானுக்கு எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் உதவியா?
மேற்கு ஆசியாவில் அமெரிக்க படைகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை ஈரான் பயன்படுத்தியதாக 'தி வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஒருங்கிணைக்க ஸ்டார்லிங்க் உதவியதாக கூறப்படுகிறது.
அமெரிக்கப் படைகள் ஈரானின் வழக்கமான தகவல் தொடர்பு அமைப்புகளை முடக்கிய நிலையில், ஸ்டார்லிங்க் ஈரானுக்கு மாற்று தகவல் தொடர்பு வழியாக அமைந்துள்ளது. ஈரான் இந்த சேவையை பயன்படுத்தியதும், அமெரிக்க ராணுவம் ஸ்டார்ஷீல்ட் சேவையை பயன்படுத்தியதும் எலான் மஸ்கிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இது தொடர்பாக பென்டகன் செய்தி தொடர்பாளர் கிங்ஸ்லி வில்சன் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஈரானில் உள்ள சாமானிய மக்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இணைய வசதி கிடைப்பதற்காக ஸ்டார்லிங்க் சேவை வழங்கப்பட்ட நிலையில், அது எதிரிகளின் கைகளில் சிக்குவதை தடுப்பது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

