திங்கள், 28 ஏப்ரல் 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 26 ஏப்ரல் 2025 (17:01 IST)

பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!

Health
இன்றைய வாழ்க்கை முறையில், பெண்கள் வேலை மற்றும் குடும்பத்தை சமநிலைப்படுத்தி வாழ்கிறார்கள். ஆனால் வயது வளர்ந்ததும், தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த மறந்து விடுகிறார்கள். இதனால் நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு, கால்சியம் குறைபாடு போன்ற பிரச்சனைகள் வர அதிக வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க, சில முக்கிய பரிசோதனைகளை நிதானமாக செய்துகொள்ள வேண்டும்.
 
முதலில், உடல் எடை மற்றும் உயரத்தை அடிப்படையாகக் கொண்டு பிஎம்ஐ மதிப்பை தெரிந்து கொள்ள வேண்டும். 
 
இரண்டாவது, ரத்த சோப்பை பரிசோதனை செய்து, தேவையான ஹீமோகுளோபின் அளவை உறுதி செய்ய வேண்டும். 
 
மூன்றாவது, வைட்டமின் டி மற்றும் பி12 அளவுகளை சரிபார்க்க வேண்டும், இது எலும்புகள் மற்றும் உடல் சக்திக்கு முக்கியமானது.
 
நான்காவது இரத்த அழுத்தம் பரிசோதனை அவசியம், குறிப்பாக 18 வயதிற்குப் பிறகு. 
 
ஐந்தாவது 45 வயதைக் கடந்தவர்கள் குளுக்கோஸ் அளவையும் பரிசோதிக்க வேண்டும். 
ஆறாவது இதயநோய் தடுப்பதற்காக, உடல் கொழுப்பு அளவையும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பார்க்க வேண்டும்.
 
ஏழாவது மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் பரிசோதனைகள் 30 வயதிற்குப் பிறகு தவறாமல் செய்ய வேண்டும். 
 
எட்டாவது எலும்பின் வலிமையை பரிசோதித்து ஆஸ்டியோபோரோசிஸ் நோயை தடுப்பது முக்கியம். 
 
ஒன்பதாவது பெருங்குடல் மற்றும் தோல் புற்றுநோய்களுக்கான பரிசோதனைகளும் சரியான நேரத்தில் செய்ய வேண்டும்.
 
ஆரோக்கியம் சிறந்த வாழ்விற்கு அடிப்படை என்பதால், பெண்கள் இதை கவனமாக மேற்கொள்ள வேண்டும்.
 
Edited by Mahendran