வியாழன், 24 ஏப்ரல் 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 23 ஏப்ரல் 2025 (19:37 IST)

மாரடைப்பு வருவதற்கு முன் வரும் அறிகுறிகள் என்ன?

heart attack
இடதுபக்க நெஞ்சுவலி என்றதும் “மாரடைப்பு” என்ற எண்ணம் பலருக்கும் முதலாவதாக வந்து விடுகிறது. சிறிய வலியாலேயே நாம் அச்சம் கொண்டு விடுவோம். ஆனால், அந்த இடத்தில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் பல இருக்கின்றன.
 
இதய நோய் மட்டுமல்ல; நுரையீரல் குறைபாடுகள், ஜீரண கோளாறுகள், விலா எலும்பு பிரச்சினைகள், மன அழுத்தம், அதிக வாயு, ஆஸ்துமா, நிமோனியா ஆகியவையும் காரணமாக இருக்கலாம். இதய சம்பந்தப்பட்ட வலி என்றால், இடது தோள்பட்டை, கை, விரல்கள் வரை வலி பரவலாம். வியர்வை அதிகமாக வரும்,  மூச்சுத் திணறல், வாந்தி போல தோன்றும், இதயத்துடிப்பு வேகமாகும்.
 
நெஞ்சை சுற்றி சுமை கட்டி வைத்திருப்பது போல ஒரு உணர்வு ஏற்படும். இவை போன்று ஒரே நேரத்தில் பல அறிகுறிகள் தோன்றினால், காலத்தை வீணாக்காமல் அருகிலுள்ள மருத்துவமனைக்கே செல்ல வேண்டும்.
 
பலர் வாயுவால் நெஞ்சு வலிக்கிறது என்று நினைத்து வீட்டு வைத்தியம் முயற்சிக்கிறார்கள், மருந்தகத்தில் விட்டு மருந்து வாங்குகிறார்கள். இது தவறு. உணவில் காரம், எண்ணெய், மசாலா அதிகம் இருந்தால் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, நெஞ்சுவலி போல தோன்றலாம்.
 
 
Edited by Mahendran