1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. 15-Year-Old Vaibhav Suryavanshi Hits Fastest List A Double Century in 52 Balls

52 பந்துகளில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்...

வைபவ் சூர்யவன்ஷி
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ மற்றும் யுஎஇ ஏ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், இந்தியாவின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 52 பந்துகளில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
 
முதலில் பேட்டிங் செய்த யுஎஇ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி வெறும் 14.2 ஓவர்களில் 254-3 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பும் வலுப்பெற்றுள்ளது.
 
தொடக்க வீரராகக் களமிறங்கிய சூர்யவன்ஷி, 53 பந்துகளில் 204 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 385 என்ற அதிரடி ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய அவர், 28 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளை விளாசினார். 
 
26 பந்துகளில் சதத்தை எட்டிய அவர், 52 பந்துகளில் இரட்டைச் சதத்தை நிறைவு செய்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டைச் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 52 பந்துகளில் சூர்யவன்ஷி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து சாட் போவ்ஸ் (103 பந்துகள்), நாராயண் ஜெகதீசன் (114 பந்துகள்) ஆகியோர் உள்ளனர்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
நிதானமான விளையாடும் ருத்ராஜ்.. கேப்டனை மாற்ற சிஎஸ்கே ரசிகர்கள் கோரிக்கை...