1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Netflix Series Jo Bachay Hain Sang Samait Lo Trailer Out Amid Calls for India Ban

பாகிஸ்தான் வெப்தொடரை இந்தியாவில் தடை செய்ய கோரிக்கை.. நெட்பிளிக்ஸ் சம்மதிக்குமா?

ஜோ பச்சே ஹைன் சாங் சமைத் லோ
பவாத் கான், மஹிரா கான் நடிப்பில் உருவாகியுள்ள நெட்ஃபிளிக்ஸ் பாகிஸ்தான் தொடரான 'ஜோ பச்சே ஹைன் சாங் சமைத் லோ' டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் இத்தொடருக்கு தடை விதிக்க கோரிக்கை எழுந்துள்ளது. அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் இந்தியாவில் இத்தொடர் வெளியாவதை தடுக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
 
ஃபர்ஹத் இஷ்தியாக் நாவலை தழுவி மூன்று தலைமுறைகளில் ஆறு காதல் கதைகளை கொண்ட இத்தொடர், டிசம்பர் 4-ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. அஹத் ராஸா மிர், ஹானியா ஆமிர், சனம் சயீத், இக்ரா அஸிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்தொடர், பாகிஸ்தான், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் இத்தொடரை காண முடியுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
 
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு மே 2025-ல் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை சுட்டிக்காட்டி, பாகிஸ்தான் உள்ளடக்கங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஓடிடி தளங்கள் இந்த விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஷாலினியின் பிறந்தநாளையும் கோர்த்து பார்த்திபன் அடித்த ரொமாண்டிக் கவுண்டர்: வெட்கத்தில் திணறிய அஜித்