திசை மாறி போயிடாதீங்க!.. தவெக எம்.எல்.ஏக்களுக்கு விஜய் அட்வைஸ்...
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. எனவே தவெக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் முயற்சியில் திமுக ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க தவெக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற சிலர் முயன்று வருவதாக ஏற்கனவே செய்திகள் கசிந்தது. ஏற்கனவே மதுரை எம்.எல்.ஏ ஷாஜகானிடம் மதுரையை சேர்ந்த அதிமுக பிரமுகர் மன்னவன் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.30 கோடி வரை பேரம் பேசியதாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்..
தவெக அரசுக்கு எதிராக வாக்களித்தால் ரூ.30 கோடி வரை கொடுப்பதாக தவெக எம்.எல்.ஏக்களிடம் சிலர் பேரம் பேசி வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான் நேற்று எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் விஜய் மக்கள் மனம் நோகும் படி நடந்து கொள்ளக் கூடாது..
ஏனென்றால் அவர்கள் வாக்களித்துதான் நாம் வெற்றி பெற்றோம்.. தவெக - திமுக இடையேதான் போட்டியே.. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.. திசை மாறி சென்று விடாதீர்கள்.. யாருக்கும் விலை போய்விடாதீர்கள்.. நமக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று அறிவுரை கூறியிருக்கிறாராம்.