1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. cinema fans like suriya scene novie review

சூர்யாவுக்கு ஹாட்ரிக் ஹிட்!.. ரசிகர்கள் பாராட்டும் சீன்... படம் எப்படி இருக்கு?..

scene
மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்த உருவாகியுள்ள சீன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகியிருக்கிறது.
இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நிலையில் இன்று திரைப்படம் ரிலீஸாகியிருக்கிறது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்திருக்கிறார். இன்று தமிழகத்தில் பல திரையரங்குகளும் காலை 6 மணி முதல் 6:30க்குள் முதல் காட்சி திரையிடப்பட்டது. முதல் காட்சி பார்த்த பலரும் இந்த படம் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள். ‘கருப்பு, விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என இரண்டு வெற்றி படங்களுக்கு பின் இந்த படமும் சூர்யாவுக்கு வெற்றிதான்.. சூர்யா ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளார்.. 2026 சூர்யாவுக்குதான்’ என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

படம் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் குடும்பத்துடன் சென்றும் பார்க்கலாம்.. படத்தில் காமெடி காட்சிகள் நன்றாக இருக்கிறது.. சண்டை காட்சிகள் நன்றாக இருக்கிறது.. சில இடங்களில் லேக் இருந்தாலும் மொத்தமாக பார்த்தால் படம் நன்றாகவே இருக்கிறது என பலரும் கூறி வருகிறார்கள். எனவே கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு பின் சீன் திரைப்படமும் சூர்யாவுக்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ராமாயணம் முதல் நாள் இந்திய வசூல் எவ்வளவு? போட்ட முதலீட்டை எடுத்துவிடுமா?