இனி Claude செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் வங்கி கணக்குகளையும் இணைக்கலாம்.. பணம் அனுப்ப முடியுமா?
ஆந்த்ரோபிக் நிறுவனம் தனது Claude செயற்கை நுண்ணறிவுத் தளத்தில் 'க்ளாட் பர்சனல் ஃபைனான்ஸ்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர் கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டுகளை இணைத்து, நிதியறிக்கைகள் மற்றும் செலவின பழக்கவழக்கங்களை ஆய்வு செய்ய முடியும்.
ஆனால், இதில் ஒரு முக்கிய கட்டுப்பாடு உள்ளது. இந்த அம்சம் 'பார்வையிட மட்டுமே' அனுமதி அளிக்கும். அதாவது, க்ளாட் AI-ஆல் பணப்பரிவர்த்தனைகளை செய்யவோ அல்லது நிதியை மாற்றவோ முடியாது; தரவுகளை ஆய்வு செய்து பகுப்பாய்வு மட்டுமே வழங்கிட முடியும்.
'பிளாயிட்' என்ற ஃபின்டெக் தளம் வழியாக வங்கிக்கணக்குகளை இணைக்கலாம். இதன் மூலம் வங்கி பெயர், கணக்கு வகை, கணக்கு இருப்புகள் மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான பரிவர்த்தனைகளை க்ளாட் பெற முடியும். பயனர்களின் வங்கி கடவுச்சொற்களை இது கேட்காது என்பது குறிப்பிடத்தக்கது.
மாதாந்திரச் செலவுகளை வகைப்படுத்துதல், வட்டி விகிதங்களைக் கணக்கிடுதல், வாராந்திரச் செலவு வரைபடங்கள் மற்றும் செலுத்துதல் காலண்டர்களைத் தயாரித்துத் தருதல் ஆகிய பணிகளை இத்தளம் செய்கிறது. விளம்பரங்களோ அல்லது ஸ்பான்சர் செய்யப்பட்ட பரிந்துரைகளோ இதில் இடம்பெறாது.
தற்போது அமெரிக்காவில் உள்ள க்ளாட் புரோ, மேக்ஸ் மற்றும் அல்ட்ரா சந்தாதாரர்களுக்கு பீட்டா பதிப்பாக இந்த வசதி வழங்கப்பட்டு வருகிறது.

