2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மிட்டாய் கடை.. இன்று ரூ.100 கோடி லாபம் தரும் நிறுவனம்...
பாரம்பரிய இந்திய இனிப்பு வகைகளுக்கு நவீன வடிவம் கொடுத்து, சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பிரம்மாண்ட நிறுவனமாக 'பாம்பே ஸ்வீட் ஷாப்' உருவெடுத்துள்ளது.
2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் சமீர் சேத் மற்றும் யாஷ் பானேஜ் ஆகிய தொழில்முனைவோரால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டு இனிப்புகள் ஆடம்பரமாக விற்கப்படுவதை கண்ட உத்வேகத்தில், நமது பாரம்பரிய மிட்டாய்களையும் உலகத்தரத்திற்கு மாற்ற இவர்கள் திட்டமிட்டனர்.
இவர்கள் பாரம்பரிய இனிப்புகளுடன் மேற்கத்திய பேஸ்ட்ரி கலை நுணுக்கங்களை இணைத்து காபி ரசகுல்லா டிராமிசு, டார்க் சாக்லேட் காஜு கட்லி, பெர்ரி கலாகண்ட் சீஸ்கேக் போன்ற புதுமையான இனிப்புகளை அறிமுகப்படுத்தினர். மேலும், சில்லி சீஸ் புஜியா, மெட்ராஸ் கறிவேப்பிலை சிக்கி போன்ற வித்தியாசமான கார வகைகளும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
நிறுவனம் தொடங்கப்பட்ட 10 நாட்களிலேயே பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோதும், உடனடியாக ஆன்லைன் விற்பனைக்கு மாறி இவர்கள் சாதனை படைத்தனர். தற்போது மும்பையில் 5 நேரடி விற்பனை நிலையங்கள் மற்றும் 20 ஆன்லைன் ஸ்டோர்களுடன் இயங்கும் இந்நிறுவனத்தின் இனிப்புகள், ஸ்டார்பக்ஸ், ஓபராய் ஹோட்டல்கள் மற்றும் இண்டிகோ விமானங்களின் பிசினஸ் வகுப்புகளிலும் வழங்கப்படுகின்றன.

