1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Government Free Coaching Centre Announces 2026 Mock Personality Test for Civil Services Aspirants

தமிழக மாணவர்களின் ஐஏஎஸ் கனவு நனவாகும் நேரம்! தமிழக அரசின் இலவச பயிற்சி மையம்..

குடிமைப்பணித் தேர்வு
தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில், 2026-ஆம் ஆண்டிற்கான மாதிரி ஐஏஎஸ் தேர்வு நடத்தப்பட உள்ளது. அனைத்து பிரிவு தேர்வர்களுக்கும் இலவச பயிற்சி அளித்து வரும் இம்மையம், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் 7, 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இந்த தேர்வை நடத்துகிறது.
 
இம்மையத்தில் பயின்றவர்கள் மட்டுமின்றி, முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்ற தமிழ்நாட்டு தேர்வர்களும் பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள் டிசம்பர் 10 மாலை 5 மணிக்குள் civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 
 
டிசம்பர் 7 தேர்வில் பங்கேற்போர் டிசம்பர் 3-க்குள்ளும், மற்றவர்கள் டிசம்பர் 10-க்குள்ளும் தங்கள் DAF விவரங்களை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
 
தேர்வர்களின் செயல்பாடு ஒளி/ஒலி பதிவு செய்யப்பட்டு இணையவழி வழங்கப்படும். டெல்லி ஐஏஎஸ் தேர்வுக்கான தயாரிப்பாக இதனை அணுக வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-24621475 அல்லது 9345766957 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
100% மானியத்தில் கறவை மாடு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டங்கள்.. தமிழக அரசு முடிவு...