1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Government Launches Rs 1.89 Crore Magizhudan Munneru scheme

புத்தகம் இல்லை, தேர்வு இல்லை, மதிப்பெண்ணும் இல்லை, பாஸ், பெயிலும் இல்லை! மகிழ்வுடன் முன்னேறு புதிய திட்டம்...

மகிழ்வுடன் முன்னேறு
தமிழ்நாட்டில் 6,279 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணர "மகிழ்வுடன் முன்னேறு" திட்டம் ரூ.1.89 கோடி நிதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புத்தகம், தேர்வு மற்றும் மதிப்பெண்கள் இன்றி, வெற்றி-தோல்விக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு மாணவரின் திறமையையும் கொண்டாடும் விதமாக இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
டிசம்பர் 1, 2026, ஜனவரி 12, 2027 மற்றும் பிப்ரவரி 2, 2027 ஆகிய மூன்று நாட்களில் இந்த விழா நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாளுக்கு ரூ.1,000 வீதம் மூன்று நாட்களுக்கு ரூ.3,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
மாணவர்களே தாங்களாக முன்வந்து நிகழ்வுகளைத் திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, தங்கள் படைப்பாற்றலையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்த இது வாய்ப்பளிக்கிறது. பெற்றோர் மற்றும் பொதுமக்களும் மாணவர்களின் திறன்களை நேரில் கண்டு பாராட்டலாம். 
 
இதன் மூலம் தன்னம்பிக்கை, குழு உணர்வு மற்றும் வாழ்வியல் திறன்கள் வளரும் வகையில் பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
தமிழக மாணவர்களின் ஐஏஎஸ் கனவு நனவாகும் நேரம்! தமிழக அரசின் இலவச பயிற்சி மையம்..