1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. gold-price-today-november-25-down-rs-2360-per-sovereign

அதிரடியாக குறைந்த தங்கம் விலை!.. சவரனுக்கு ரூ.2,360 சரிவு!

தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இன்று (நவம்பர் 25) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து, ரூ.11,420க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.2,360 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.91,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
நேற்று ரூ.93,720க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் ரூ.2,360 குறைந்துள்ளது.
 
திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கக் காத்திருந்தவர்களுக்கு இந்த விலை சரிவு சற்று ஆறுதலை அளித்துள்ளது. தங்கம் விலை வரும் நாட்களில் மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
 
 
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
எல் நினோவால் தமிழகத்தில் வறட்சி யா? ஏமாற்றிய வடகிழக்கு பருவமழை.. விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு...