1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Childrens Day Treat: Rs 7.34 Crore Tender Finalized to Supply 62 Lakh Cakes to Tamil Nadu School Students

குழந்தைகள் தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு கேக்.. ரூ.7.34 கோடியில் 62 லட்சம் கேக்குகள்.. யார் யாருக்கு டெண்டர்..

குழந்தைகள் தின கேக்குகள்
வரும் 2026-ஆம் ஆண்டு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள 'ஸ்பான்ஜ் ஸ்லைஸ் கேக்குகள்' தயாரிப்பு மற்றும் விநியோகத்திற்கான டெண்டர் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதற்காக மொத்தம் ரூ.7.34 கோடி மதிப்பில் 62,46,412 கேக்குகள் வாங்குவதற்கு நான்கு முன்னணி நிறுவனங்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
 
டிரீம் பேக் நிறுவனத்திற்கு அதிகபட்சமாக ரூ.3.84 கோடியில் சுமார் 33.87 லட்சம் கேக்குகள் சப்ளை செய்ய ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டானியா நிறுவனத்திற்கு ரூ.1.28 கோடியிலும், எலைட் நேச்சுரல் நிறுவனத்திற்கு ரூ.1.14 கோடியிலும், ஐடிசி சன்ஃபீஸ்ட் நிறுவனத்திற்கு ரூ.1.07 கோடியிலும் ஆர்டர்கள் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. சேலம், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்காக இந்த கேக்குகள் தயாரிக்கப்பட உள்ளன.
 
இந்த கேக் வகைகள் அனைத்தும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக, அதாவது நவம்பர் 9 முதல் நவம்பர் 11-க்குள் அந்தந்த மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக  குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
 
 மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக அக்டோபர் 26 முதல் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் அதிகாரிகள் நேரடி ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர். அரசின் இந்த அதிரடித் திட்டத்தால் லட்சக்கணக்கான பள்ளி மாணவர்கள் குழந்தைகள் தினத்தில் சுவையான கேக்குகளுடன் மகிழவிருக்கிறார்கள்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஆவின் பிரியர்களுக்கு ஜாக்பாட்! முந்திரி அல்வா தயாரிக்க ரூ.72 லட்சத்தில் ஒப்பந்தம்.. செம்ம தீபாவளி ட்ரீட்!