1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Government Announces Rs 5,000 Cash Prize for Primary Students Reciting 300 Thirukkural Couplets

1,330 குறள்கள் அல்ல 300 குறள் சொன்னால் போதும், பரிசு உண்டு.. தமிழக அரசு அறிவிப்பு...

vijay
இளம் வயதிலேயே தமிழ் இலக்கிய பற்றை வளர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பள்ளி மாணவர்களுக்கான புதிய திருக்குறள் பரிசுத் திட்டத்தை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
இதுவரை 1,330 குறள்களையும் முற்றோதல் செய்யும் மாணவர்களுக்கு ரூ.15,000 வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 5-ம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக இந்த சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
அரசாணை நிலை எண் 206-ன் படி, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 300 திருக்குறள்களை மனனம் செய்து ஒப்பித்தால் போதும். ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படும் முதல் 500 மாணவர்களுக்குத் தலா ரூ.5,000 பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
மாவட்ட அளவிலான போட்டிகள் மற்றும் பரிசு வழங்கும் விழாவிற்கான உணவு, தங்குமிடம், போக்குவரத்துச் செலவுகளையும் அரசே ஏற்கிறது. ஏற்கனவே உள்ள 1,330 குறள் முற்றோதல் திட்டமும் தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் அரசின் இந்த ஊக்கமளிக்கும் நடவடிக்கைக்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
நாளை 2-வது வெற்றி தமிழ்நாடு முதலீடு.. 85 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தகவல்...