செனட் சபை, ஆளுநர் தேர்தலில் தோல்வி! - டிரம்ப்புக்கு பின்னடைவு ஏன்?
அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் முடிவுகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆளும் குடியரசு கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. கீழவை பிரதிநிதிகள் சபையின் 435 இடங்கள் மற்றும் மேலவை சபையில் மொத்தம் 100 இடங்களில் காலியாகும் 35 இடங்களுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் முடிவில் அமெரிக்க செனட் சபையில் 39 இடங்களை பெற்றுள்ள டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டது. மொத்தமுள்ள 100 இடங்களில் 51 இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியிருக்கிறது. இந்த தேர்தல் மட்டுமில்லாமல் 35 ஆளுநர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் அதிலும் ஜனநாயகக் கட்சி அமோகமான வெற்றியை பெற்றுள்ளது. நியுயார்க், கலிபோர்னியா, டெக்சாஸ், ஓஹியோ ஆகிய 22 மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்.
டொனால்ட் டிரம்ப் அதிபரான பின் தீவிர வரி விதிப்புகள், ஈரான் உடனான போர் காரணமாக அமெரிக்காவில் உணவு, எரிபொருள் உள்ளிட்ட விலைவாசி உயர்வு பிரச்சனை தலை தூக்கியதே இடைக்கால தேர்தலில் குடியரசுக் கட்சிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.