1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Strict Action Against Tamil Nadu Govt Employees for Social Media Criticism and Memes: Health Department Issues Warning

அரசு ஊழியர்களுக்கு பேரிடி! அரசை விமர்சித்து மீம்ஸ் போட்டால் ஒழுங்கு நடவடிக்கை.. அதிரடி நடவடிக்கை..

அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது என வலியுறுத்தி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 1973-ம் ஆண்டைய அரசு ஊழியர் நடத்தை விதிகளைச் சுட்டிக்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த உத்தரவின்படி, அரசு ஊழியர்கள் மத்திய அல்லது மாநில அரசின் நடவடிக்கைகளைச் செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் விமர்சிக்கவோ, கிண்டல் செய்து மீம்ஸ்  பதிவிடவோ கூடாது. மேலும், அரசை விமர்சிக்கும் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற அரசுகளுடனான நல்லுறவைப் பாதிக்கும் கருத்துகளை வெளியிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
சமீபகாலமாகச் சமூக வலைதளங்களில் அரசின் திட்டங்களைக் கேலி செய்யும் போக்கு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறிச் செயல்படும் பணியாளர்கள் மீது துறை ரீதியான விசாரணை, விளக்கம் கோரும் நோட்டீஸ்  மற்றும் சஸ்பெண்ட் போன்ற கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது சுகாதாரத்துறையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு விரைவில் அனைத்து அரசுத் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
டெல்லிக்குச் செல்லும் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்: கடந்த 5 மாதங்களில் 3 பேர் டெல்லிக்கு இன், 3 பேர் அவுட்!