1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. suresh gopi angery to press reporters in airport

இப்ப என்ன நான் விஜய திட்டணுமா?!.. நிருபர்களிடம் கடுப்பான சுரேஷ் கோபி!...

suresh gopi
மலையாள மொழியில் பல திரைப்படங்களில் நடித்தவர் சுரேஷ் கோபி. தமிழில் தீனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கேரளாவில் பாஜகவில் செயல் பட்டு வரும் சுரேஷ்கோபிக்கு எம்.பி பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே கடந்த சில வருடங்களாகவே அவர் அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு சுரேஷ் கோபி வந்திருந்த போது அவரிடம் செய்தியாளர்கள் தவெக அரசின் செயல்பாடுகள், தமிழ்நாட்டின் விலைவாசி ஏற்றம் பற்றியெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். அவர் பொறுமையாக பதில் சொன்னாலும் மீண்டும் தவெக அரசுக்கு எதிராக செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்..

இதில் கடுப்பான சுரேஷ் கோபி ‘நீங்கள் யாரிடம் எதைக் கேட்க வேண்டுமோ அதைத்தான் கேட்க வேண்டும்.. என்னிடம் இதை கேட்கக் கூடாது.. தமிழ்நாட்டில் விலைவாசி ஏறியது பற்றி நான் ஏன் கருத்து சொல்ல வேண்டும்? இங்குள்ள தவெக, திமுக, அதிமுகவிடம் கேளுங்கள்.. விலைவாசி ஏற்றம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை.. கேரளா, கர்நாடகா என எல்லா மாநிலத்திலும் இருக்கு.. இப்ப நான் என்ன விஜயை திட்டணுமா? அதை எடுத்து போட்டு நீங்க எல்லாருக்கும் பணம் சம்பாதிக்கணுமா?.. கேரளாவை பற்றி கேட்டால் நான் பேசுவேன்’ என கோபமாக பதிலளித்தார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் டாக்டர் ராமதாஸின் மகள்.. அன்புமணிக்கு போட்டியா?