1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 17 மே 2025 (09:39 IST)

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கிரிக்கெட் உலகில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருவது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீர் டெஸ்ட் ஓய்வு முடிவுதான். 36 வயதாகும் அவர் கடந்த வாரம் ஓய்வு முடிவை அறிவித்த போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

குறைந்தபட்சம் கோலியிடம் பேசி அவரை இங்கிலாந்து தொடரிலாவது விளையாட வற்புறுத்தி அவருக்கு கௌரவமாக விடைகொடுத்து அனுப்பி இருக்க வேண்டும் என்ற ஆதங்கப் பதிவுகளும் பரவி வருகின்றன. ஆனால் பிசிசிஐ கொடுக்காத  விடைபெறல் கொடுக்கவுள்ளனர்.

இன்று ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் ஆர் சி பி அணி கொல்கத்தாவை சின்னசாமி மைதானத்தில் எதிர்கொள்கிறது. இதையடுத்து பெங்களூரு அணி ரசிகர்கள் கோலியின் டெஸ்ட் ஜெர்ஸியை அணிந்து வந்து அவருக்கு மரியாதை செலுத்த உள்ளனர். இதற்காக மைதானத்துக்கு வெளியே வெள்ளை நிற டெஸ்ட் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது.