1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 ஏப்ரல் 2025 (16:31 IST)

ரொம்ப நாள் ஆசை மேடம்.. ப்ரீத்தி ஜிந்தாவை ஓடிப்போய் கட்டிப்பிடித்த RCB வீரர்!

Jitesh sharma hugs preity zinta

ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளரும், நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தாவை ஆர்சிபி அணி வீரர் கட்டிபிடித்த வீடியோ வைரலாகியுள்ளது.
 

பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் நேற்று மதிய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்டன. முன்னதாக பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் வைத்து ஆர்சிபியை பஞ்சாப் வீழ்த்தியதற்கு பழி வாங்கிய ஆர்சிபி சண்டிகரில் வைத்து பஞ்சாப்பை பந்தாடி வென்றது.

 

பொதுவாக பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெறும்போதெல்லாம் அதன் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா பஞ்சாப் வீரர்களை கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்வார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகும். இந்நிலையில் நேற்று பஞ்சாப் அணி தோற்றிருந்த நிலையில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணியின் ஜிதேஷ் சர்மா, ப்ரீத்தி ஜிந்தாவை பார்த்து ஓடி வந்தார்.

 

ஆனால் ப்ரீத்தி ஜிந்தா அவர் எதிரணி ப்ளேயர் என்றெல்லாம் பாகுபாடெல்லாம் பார்க்காமல் அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தார். இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து, எதிரணிக்கும் கட்டியணைத்து வாழ்த்து சொன்ன ப்ரீத்தி ஜிந்தாவை புகழ்ந்து வருகிறார்கள்.

 

Edit by Prasanth.K