நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வி அடைந்த நிலையில் அதற்கான காரணம் குறித்து கேப்டன் எம்.எஸ்.தோனி பேசியுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியை பந்துவீச்சில் கட்டுப்படுத்திய மும்பை அணி 176 ரன்களை மட்டும் பெறும்படி செய்தது. தொடர்ந்து சேஸிங்கில் அதிரடி காட்டிய மும்பை அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 177 ரன்களை 15.4வது ஓவரிலேயே குவித்து மேட்ச்சை முடித்தது.
சென்னை அணியின் இந்த படுதோல்வி குறித்து பேசியுள்ள கேப்டன் எம்.எஸ்.தோனி “பேட்டிங்கில் நாங்கள் சராசரி ரன்னை விட குறைவாகவே சேர்த்திருந்தோம். டெத் பவுலரான பும்ரா உலகின் மிகச்சிறந்த பவுலரும் கூட. மும்பை சீக்கிரமாகவே டெத் ஓவரை தொடங்கிவிட்டார்கள். நாங்கள் மிடில் ஓவரில் அதிக ரன்களை சேர்த்திருக்க வேண்டும்.
ஆயுஷ் மாத்ரே சிறப்பாக விளையாடினார். அவர் கொடுத்த தாக்கத்தை அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் தொடர்ந்திருக்க வேண்டும். ஸ்கோரே அடிக்காதபோது சிக்ஸர்களையும் விட்டுக் கொடுத்தால் ஆட்டம் நம் கைகளில் இருக்காது.
இத்தனை சீசன்களாக சிஎஸ்கே சிறப்பாக செயல்பட்டதற்கு அது நல்ல கிரிக்கெட்டை ஆடியதே காரணம். அடுத்தடுத்த போட்டிகளில் நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறோமா என்பதுதான் முக்கியம். அடுத்த 6 போட்டிகளிலும் அதை செய்ய முயற்சிப்போம். இந்த சீசன் சிஎஸ்கேவுக்கு இல்லாவிட்டாலும் எங்கள் ப்ளேயிங் லெவனை வலுப்படுத்தவும், அடுத்த சீசனுக்கும் இதை பயன்படுத்திக் கொள்வோம்” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K