1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (17:22 IST)

157 ரன்களில் பஞ்சாபை சுருட்டிய RCB! சேஸ் செய்து பாஸ் செய்யுமா? பரபரப்பான Second Half!

Krunal Pandya RCB

இன்றைய ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த ராயல் சேலஞ்சர்ஸ் நினைத்தபடியே ரன்களை சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளது.

 

ஓப்பனிங் இறங்கிய ப்ரயான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் 4 ஓவர்கள் வரை அதிரடியாகவே ஆடி 42 ரன்களை குவித்திருந்தனர். ஆனால் 4.2வது ஓவரில் ப்ரயான்ஷ் ஆர்யா விக்கெட்டை க்ருணால் பாண்ட்யா தூக்கியதுடன், 6வது ஓவரில் வந்து ப்ரப்சிம்ரன் விக்கெட்டையும் தூக்கினார். இது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

 

பவர்ப்ளே முடிந்து களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களில் அவுட்டாக, ஜோஷ் இங்லிஷ் மட்டும் நின்று விளையாடி 29 ரன்கள் குவித்து அவுட் ஆனார். சஷாங்க் சிங் குறிப்பிடும் விதமாக 31 ரன்களை அடித்தார். கடைசியில் இறங்கியிருந்த மார்கோ ஜான்சன் முடிந்தளவு வலுக்கொடுத்து 2 சிக்ஸர்களை தாக்கி 20 பந்துக்களுக்கு 20 ரன்கள் என இலக்கை சற்று உயர்த்தினார். இதன்மூலம் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்துள்ளது பஞ்சாப்.

 

சின்னசாமியில் வைத்து ஆர்சிபியை செய்ததற்கு பதிலடி இன்று உறுதி என ஆர்வமாக காத்திருக்கின்றனர் ஆர்சிபி ரசிகர்கள். இந்த Revenge weekல் ஆர்சிபி இந்த சேஸிங்கை எட்டி வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Edit by Prasanth.K