வியாழன், 20 நவம்பர் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 20 நவம்பர் 2025 (11:12 IST)

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!
தற்போது கிரிக்கெட் விளையாடும் அணிகளில் மூன்று விதமான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இந்தியா உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது ஒரே நாளில் மூன்று விதமான போட்டிகளில் விளையாடினாலும் அதற்கேற்ப வீரர்களைக் கொண்டுள்ளது.

இந்நிலையில் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி அதிகளவில் விளையாடாத போதும் அதன் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியான தரவரிசையில் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா முதலிடத்திலும், ஷுப்மன் கில் நான்காம் இடத்திலும், விராட் கோலி ஐந்தாம் இடத்திலும் இருந்தனர்.

இந்நிலையில் இந்த வாரத்துக்கான தரவரிசையில் ரோஹித் ஷர்மாவைப் பின்னுக்குத் தள்ளி நியுசிலாந்து வீரர் டேரில் மிட்செல் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் 46 ஆண்டுகளுக்குப் பிறகு நியுசிலாந்து பேட்ஸ்மேன் ஒருவர் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.  1979 ஆம் ஆண்டு அந்த அணியின் க்ரௌன் டர்னர் முதலிடம் பிடித்திருந்தார்.