ஈரானை தாக்க தயங்க மாட்டேன்!.. மீண்டும் யூடர்ன் போடும் டொனால்ட் டிரம்ப்....
ஈரான் நாடு அணு ஆயுதம் தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா போரை தொடங்கியது. பல மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அமெரிக்கா எந்த தாக்குதலையும் நடத்தவில்லை.
மேலும் ஈரானோடு பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் அமெரிக்க ஈடுபட்டிருக்கிறது.
ஆனால் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஈரான் ஏற்காததால் இரண்டு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஒருபக்கம் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்ததை அமெரிக்க மக்களே விரும்பவில்லை. ஏனெனில், அமெரிக்காவில் பொருளாதாரம் வீழ்ச்சி ஏற்பட்டு பொருட்களின் விலைகள் உயர்ந்தன. இதன் காரணமாக சமீபத்தில் நடந்த அமெரிக்க பாராளுமன்ற இடைத்தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசு கட்சி தோல்வி அடைந்தது..
இதற்கு ஈரான் மீது போர் தொடுத்ததுதான் காரணம் என டிரம்ப் ஒப்புக்கொண்டார். மேலும், ஈரான் மீது இனி தாக்குதலை நடத்த மாட்டோம் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் யூடர்ன் அடித்துள்ளார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய டொனால்ட் டிரம்ப் தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த தயங்க மாட்டேன்.. ஐரோப்பாவை தாக்கக்கூடிய ஆயுதங்களை ஈரான் தன் வசம் வைத்திருக்கிறது..
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், சாண்டியாகோ உள்ளிட்ட நகரங்களுக்கும் ஈரான் அச்சுறுத்தலாக இருக்கலாம்.. அமெரிக்க நட்பு நாடுகளில் ஈரான் அச்சுறுத்துவதை தடுக்க தேவையான அனைத்தையும் நான் செய்வேன்.. ஈரானின் கடற்படை, விமானப்படை ஆகியவை இல்லாமல் போய்விட்டன.. ஈரானின் பொருளாதாரமும் சரிந்து விட்டது என அவர் பேசியிருக்கிறார்.