சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையை காண முன்பதிவு.. தேதி அறிவிப்பு..
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் வரும் நவம்பர் 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் கலந்துகொண்டு தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக, 'ஆன்லைன்' முன்பதிவு அக்டோபர் 29-ஆம் தேதி காலை 10:00 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
பக்தர்கள் திரளாக வருகை தருவதால் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், தரிசனத்தை எளிமையாக்கவும் இந்த ஆன்லைன் முன்பதிவு முறை செயல்படுத்தப்படுகிறது. பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது தரிசன நேர முன்பதிவை இலவசமாகச் செய்து கொள்ளலாம்.
இணையதள முன்பதிவு தவிர, பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பாதைகளில் தினசரி அனுமதி அளவுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிலக்கல்-பம்பை பாதை வழியாக தினமும் 60,000 பேருக்கும், எருமேலி, பெருவழிப் பாதை மற்றும் வண்டிப்பெரியாறு, சத்திரம் பாதைகளில் தலா 3,000 பேருக்கும் அனுமதிகள் வழங்கப்படும்.
மேலும், முன்பதிவு செய்ய தவற தவறும் பக்தர்களுக்காக நிலக்கல், எருமேலி மற்றும் வண்டிப்பெரியாறு ஆகிய முக்கிய இடங்களில் நேரடி முன்பதிவு வசதிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஐயப்ப பக்தர்கள் தங்களின் பயணத்தை திட்டமிட்டு உரிய நேரத்தில் முன்பதிவு செய்து தரிசனம் பெறுமாறு தேவஸ்வம் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.

