ரூ.2,000 கோடி பட்ஜெட் ராமாயணம்.. ரூ.5,000 கோடி வசூல் இலக்கு: பாக்ஸ் ஆபீஸ் கணக்குகள் வெளியீடு!
நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் ரவி துபே நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான படம் 'ராமாயணம் பார்ட் 1: ரைஸ் ஆஃப் லெஜெண்ட்'. இப்படம் இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளதுடன், நவம்பர் 4-ஆம் தேதி உலகளாவிய சிறப்புக் காட்சிகளும் திரையிடப்பட உள்ளன. யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.
இப்படத்தின் தயாரிப்புச் செலவு சுமார் ரூ.2,000 கோடிகளாக மதிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தக நிபுணர் ரமேஷ் பாலாவின் கருத்துப்படி, படத்தின் பட்ஜெட் அடிப்படையில் இது முதலீட்டை மீட்க உலகளவில் சுமார் ரூ.5,000 கோடி வரை வசூலிக்க வேண்டியிருக்கும். இமாலய வசூலைப் பெற இந்தியா மற்றும் வெளிநாடுகளில் முன்பதிவு மற்றும் திரையரங்குகளில் மக்கள் வரவேற்பு பெருமளவில் தேவைப்படுகிறது.
படம் முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ.75-100 கோடி முன்பதிவும், உலகளவில் ரூ.150-200 கோடி முன்கூட்டிய விற்பனையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தென்னிந்தியச் சந்தைகளின் பங்களிப்பு இதில் மிக முக்கியமானது. இத்தனை சவால்களைக் கடந்து இப்படம் இந்திய சினிமா வரலாற்றில் புதிய வசூல் சாதனையைப் படைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

