1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. sivarajkumar doing negative role in dare devil movie

டேர் டெவில் படத்தில் வில்லனாக சிவரஜ்குமார் - வேறலெவல் அப்டேட்

dare devil
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின் ஒன்றரை வருடங்கள் கழித்து அஜித் டேர் டெவில் என்கிற படத்தில் நடிக்கவிருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே அஜித் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வந்ததால் அவர் எந்த புதிய படத்திலும் நடிக்கவில்லை.

ஒருபக்கம் அவர் கேட்ட ரூ.185 கோடி சம்பளத்தை கொடுக்க யாரும் முன்வராததால் அவரின் புதிய படம் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது அவரின் மனைவி ஷாலினியே தயாரிக்க டெவில் படம் உருவாகி வருகிறது.

குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான்,  கன்னட நடிகர் சிவராஜ்குமார் டேர் டெவில் டத்தில் வில்லனாக நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இவர் ஏற்கனவே ஜெயிலர் மற்றும் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இன்றும் வசூலில் முதலிடம் அமீர்கானின் ‘தங்கல்’ தான்.. ராமாயணம் முறியடிக்குமா?