1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. ramya krishnan explain about controversy

நான் என் கணவரை பிரியவில்லை - ரம்யா கிருஷ்ணன் விளக்கம்

ramya krishnan
திரைப்படங்களில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடித்தி வருபவர் ரம்யா கிருஷ்ணன். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார். தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு.

ஆனால் கடந்த பல வருடங்களாகவே ரம்யா கிருஷ்ணனும், அவரின் கணவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ரம்யா கிருஷ்ணன் ‘நானும்,  கிருஷ்ண வம்சியும் பிரியவில்லை.. எங்களின் வேலை காரணமாகவே சென்னை, ஐதராபாத் இரு நகரங்களில் வசித்து வருகிறோம். எனது மகனின் உடல்நலனை கருத்தில் கொண்டு நான் மகனுடன் சென்னையிலும், அவர் ஹைதராபாத்திலும் தங்கி பணியாற்றுவது என முடிவு செய்துள்ளோம். இந்த ஏற்பாட்டுக்கு பிறகு எங்களுக்கு சண்டைகள் குறைந்து நல்ல நண்பர்களாகிவிட்டோம்’ ன தெரிவித்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஹரி இயக்கத்தில் அதர்வா?.. வெளியான அப்டேட்...