1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. High-Tech Labs Opened for Evening JEE and NEET Coaching for Government School Students in Tamil Nadu

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மேலும் ஒரு வசதி.. JEE, NEET பயிற்சிக்கு பள்ளியிலேயே ஹை-டெக் லேப்!

முதலமைச்சர் விஜய்
அரசுப் பள்ளி மாணவர்களின் டாக்டர், இன்ஜினியர் கனவை நனவாக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழக  அரசு JEE மற்றும் NEET போட்டி தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சியில் மற்றொரு மைல்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
2026-2027ஆம் கல்வி ஆண்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக 'வெற்றிப் பள்ளிகள்' திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 13, 2026 முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இச்சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில், பள்ளி முடிந்து தினமும் மாலை நேரத்தில் மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை  முழுமையாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இத்திட்டத்தின் மூலம் மாதிரித் தேர்வுகள், பயிற்சித் தாள்கள் மற்றும் மதிப்பீடுகளில் எழும் சந்தேகங்களை மாணவர்கள் தங்கள் பள்ளியிலேயே ஆசிரியர்கள் மூலம் தீர்த்துக் கொள்ளலாம். மேலும், மணற்கேணி  செயலி உள்ளிட்ட இணையவழி கற்றல் வளங்கள் மற்றும் கடந்த கால வினாத்தாள்களை கொண்டு மாணவர்கள் பயிற்சி பெறுவதை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
முதலமைச்சர் விஜய் அவர்களின் இந்தத் தொலைநோக்கு நடவடிக்கையால், கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் எந்தவிதக் தடங்கலுமின்றி தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு சாதனை படைப்பார்கள் என்பது உறுதி.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஹோட்டல் ஸ்டைலில் இனி பள்ளி குழந்தைகளுக்குக் காலை உணவு! முதலமைச்சர் விஜய் திட்டம்...