தாராபுரத்தில் அதிமுக, மதுராந்தகத்தில் திமுக.. ரகசிய திட்டம் போட்டு பிரச்சார வேலை.. சதியை முறியடிக்குமா தவெக?
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்கள் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் களத்தில் நின்றாலும், உண்மையான களம் வேறுவிதமாக இருப்பதாகப் பேசப்படுகிறது.
தாராபுரம் தொகுதியில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக வாக்குகளையும், அருந்ததியர் மற்றும் முதலியார் வாக்குகளையும் குறிவைத்து அதிமுக தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறது; ஆனால் மதுராந்தகத்தில் அவர்கள் பெயரளவிலேயே இயங்குகின்றனர்.
மறுபுறம், திமுக மதுராந்தகத்தில் தீவிரமாகச் செயல்பட்டாலும், தாராபுரத்தில் மந்தமான நிலையே காணப்படுகிறது. இது ஏதோ ஒரு புரிதலின் கீழ் நடப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த சூழலில், இரண்டு தொகுதிகளிலும் வெற்றியை பெற வேண்டிய இக்கட்டான கட்டத்தில் தவெக உள்ளது. அக்கட்சியினர் நாலாபுரமும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மும்முனை போட்டி நிலவும் இந்தச் சூழலில், தவெக தலைவர் விஜய் நேரடியாகக் களமிறங்கிப் பிரச்சாரம் மேற்கொண்டால் மட்டுமே அது கட்சிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் எனத் தொண்டர்களும் பொதுமக்களும் தீவிரமாக எதிர்பார்க்கின்றனர்.
Edited by Siva

