1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Rana Daggubati Announces Horror Film 'Scary Picture' Starring Kangana Ranaut

பிரபல நடிகர் தயாரிக்கும் படத்தில் கங்கனா ரனாவத்.. டைட்டில் அறிவிப்பு...

Kangana Ranaut Scary Picture
ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு புதுடெல்லியில் நடைபெற்ற 'ஹாரர் கான் இந்தியா 2026' விழாவில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி தனது புதிய தயாரிப்பு குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, 'ஸ்கேரி பிக்சர்' என்ற புதிய ஹாரர் திரைப்படத்தை ராணா தயாரிக்கிறார்.
 
இப்படத்தில் நடிகையும், பாஜ எம்பியுமான கங்கனா ரணாவத் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தகவலை கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். தெலுங்கில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற ரவி பாபு இப்படத்தை இயக்குகிறார். ரவி பாபு இயக்கும் முதல் இந்தி திரைப்படம் இதுவாகும்.
 
அரசியல் மற்றும் சினிமா இரண்டையும் சமமாக பயணித்து வரும் கங்கனா ரணாவத், ஏற்கனவே 'ராஜ்: தி மிஸ்டரி கண்டினியூஸ்' மற்றும் 'சந்திரமுகி 2' ஆகிய ஹாரர் படங்களில் நடித்திருந்தார். தற்போது ராணா டகுபதி மற்றும் ரவி பாபுவின் கூட்டணியில் உருவாகும் 'ஸ்கேரி பிக்சர்' திரைப்படம் இந்தி சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
60 வயதில் நடிகையாக அறிமுகம்.. 93 வயதில் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி...