எவ்வளவு நேரம் கேம் விளையாடினாலும் சூடாகாத ஸ்மார்ட்போன்.. ஐக்யூ வெளியிடும் ஐக்யூ நியோ 12..
ஐக்யூ நிறுவனம் தனது புதிய 'ஐக்யூ நியோ 12' ஸ்மார்ட்போனை சீனா சந்தையில் இன்று மாலை 7 மணிக்கு அறிமுகப்படுத்த உள்ளது. கேமிங் விரும்பிகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன், வெளியீட்டிற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் அதிவேக 'ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5' செயலி மற்றும் ஐக்யூவின் சொந்த 'Q3 கேமிங் சிப்' ஆகியவற்றைக் கொண்டு இயங்குகிறது. தொடர்ந்து கேம் விளையாடும் போது போன் சூடாவதை தவிர்க்க 'ஐஸ் டோம்' என்ற செயலில் உள்ள குளிர்விக்கும் தொழல்நுட்பமும்இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
போனின் பின்புறம் சதுர வடிவிலான கேமரா மாட்யூல் மற்றும் அதில் செங்குத்தாக வைக்கப்பட்ட இரட்டை கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 'Monster Inside' லோகோ மற்றும் ஏர் வென்ட்கள் இதன் கேமிங் தோற்றத்தை உறுதிப்படுத்துகின்றன. ஷேடோ பிளாக், ஃப்ராஸ்ட் பிளேட் புளூ மற்றும் கான்டெஸ்ட் ஆகிய மூன்று கவரும் நிறங்களில் இது வெளிவருகிறது.
இதில் 9,000mAh திறன்கொண்ட பிரம்மாண்ட பேட்டரி மற்றும் 100W அதிவேக சார்ஜிங் வசதி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேமிங் பிரியர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இந்த போன் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

