எனக்கு அந்த நோய் இருக்கு!.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பார்வதி...
கேரளாவை சேர்ந்தவர் நடிகை பார்வதி. தமிழில் சசி இயக்கிய பூ படத்தின் மூலம் அறிமுகமனார். அதன்பின் மரியன் படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் பார்வதி தமிழ் படத்தில் நடிக்கவில்லை.
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பார்வதி எனக்கு ADHD என சொல்லப்படும் கவனக்குறைவு மற்றும் அதீத சுறுசுறுப்பு குறைபாடு உள்ளது. எனது நேர உணர்வு மற்றவர்களிடமிருந்து மாறுபட்டது. அடுத்த 3 வருடங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கடினமாக உழைக்க முடிவு செய்துள்ளேன். எனக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளன என கூறியிருக்கிறார்.

