ராமாயணம் முன்பதிவில் மட்டும் ரூ.45 கோடி வசூல்.. ரூ.2000 கோடி முதலீட்டை எடுத்துவிடுமா?
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் , சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ராமாயணம் பாகம்-1 திரைப்படம் வரும் நவம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தின் முன்பதிவு வசூல் தற்போது ரூ.45.96 கோடியைக் கடந்து, ரூ.50 கோடியை நெருங்கி சாதனை படைத்து வருகிறது.
இன்று காலை 2 மணி நிலவரப்படி, இந்தியாவில் 1,708 திரையரங்குகளில் 35,697 காட்சிகளுக்காக 11.01 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. நேரடி டிக்கெட் விற்பனை மூலம் ரூ.36.85 கோடியும், முதல் நாளுக்கு மட்டும் ரூ.25.39 கோடியும் வசூலாகியுள்ளது.
நகரங்கள் வாரியாக டெல்லி என்சிஆரில் ரூ.6.78 கோடியும், மும்பையில் ரூ.6.08 கோடியும், பெங்களூரில் ரூ.5.79 கோடியும் வசூலாகியுள்ளது. மாநில அளவில் மஹாராஷ்டிரா (ரூ.9.42 கோடி), கர்நாடகா (ரூ.7.15 கோடி), டெல்லி (ரூ.6.78 கோடி), குஜராத் (ரூ.3.71 கோடி) மற்றும் தெலுங்கானா (ரூ.2.93 கோடி) ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.
மொழி வாரியாக ஹிந்தி பதிப்பு ரூ.38.70 கோடியுடன் முதலிடத்திலும், கன்னடம் ரூ.4.41 கோடியும், தெலுங்கு ரூ.2.35 கோடியும், தமிழ் பதிப்பு ரூ.41.66 லட்சமும், மலையாளம் ரூ.8.01 லட்சமும் முன்பதிவு வசூல் செய்துள்ளன. சர்வதேச அளவில் இப்படத்தின் முன்பதிவு ரூ.33.23 கோடியைத் தொட்டுள்ளது.

