எங்கப்பா ஒரு கங்காணி!.. வெள்ளக்காரன் கொடுத்த 25 ஏக்கர் நிலம்.. கங்கை அமரன் பேட்டி
இசைஞானி இளையராஜா எவ்வளவு பெரிய ஆன்மீகவாதி என்பது பலருக்கும் தெரியும். இன்னும் சொல்லப்போனால் ரஜினி உள்ளிட்ட சிலர் அவரை நேரில் சந்திக்கும் போது சாமி என்றுதான் அழைப்பார்கள். தொடக்கத்தில் தாய் மூகாம்பிகையை வழிபட்டு வந்த இளையராஜா ஒரு கட்டத்தில் ரமண மகரிஷியை தனது குருவாக ஏற்றுக்கொண்டு வழிபடத் தொடங்கினார்.
40 வருடங்களுக்கும் மேல் இளையராஜா அசைவம் சாப்பிடுவதில்லை. இளையராஜா ஒரு ஆன்மீக பாடலுக்கு இசையமைத்தால் அதில் ஆன்மீகம் ததும்பி வழியும். அது எல்லோருக்கும் தெரியும். நிறைய ஆன்மிக பாடல்களையும் இளையராஜா எழுதியிருக்கிறார். ஆனால் இளையராஜாவின் தந்தை ஒரு கிறிஸ்தவர் என்பது பலருக்கும் தெரியாது. இதுபற்றி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனே பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்..
எங்க அப்பா பேரு ராமசாமி.. வெள்ளைக்காரன் காலத்துல Tea எஸ்டேட்டில் அவர் கங்காணியா வேலை செய்தார். அங்க அப்பாதான் எல்லாமே.. யார் என்ன வேலை செய்யணும்.. எத்தனை பேர் சேர்ந்து செய்யணும்? என அவர்தான் முடிவு செய்வார்.. அப்பா அங்க ரொம்ப வருஷமா வேலை செய்தார். வெள்ளைக்காரன் அப்பாவ கிறிஸ்துவ மதத்திற்கு மாற சொல்லி டேனியல் ராமசாமி என்று பெயர் வைத்தார்கள்.
வெள்ளக்காரன் சொந்த நாட்டுக்கு போகும் போது அப்பாவுக்கு 25 ஏக்கர் எழுதி கொடுத்துட்டு போனான்... அப்பா கடைசி வரை கிறிஸ்டியனாத்தான் வாழ்ந்தார். கர்த்தர் என்னை கூப்பிடுகிறார் என்று சொல்லிட்டுதான் இறந்து போனார். ஆனால், நாங்கள் கிறிஸ்டியன் இல்லை.. இந்துவா பிறந்து.. இந்துவா வளர்ந்தோம் என கூறியிருக்கிறார்..