2வது நாளாக ஃபுல் ரெய்ட்!.. ரவுடிகளை தேடி தேடி தூக்கும் போலீசார்!....
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் ரவுடிகள் வெட்டி கொலை செய்யப்படுகிறார்கள். குறிப்பாக கடந்த தீபாவளியன்று 10க்கும் மேற்பட்ட ரவுடிகள் பழிவாங்கல் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து ரவுடிகளை களையெடுக்கும் பனியில் காவல்துறை ஈடுபட்டிருக்கிறது. ஏற்கனவே 427 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 303 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டது. அதேபோல் 6540 ரவுடிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில்தான் சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக போலீசார் ரவுடிகளுக்கு எதிராக நடத்திய வேட்டையில் குற்றப் பின்னணி கொண்ட 49 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குற்றப் பின்னணிமற்றும் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் 631 ரவுடிகள் உட்பட 769 நபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். 572 சரித்திர பதிவோடு குற்றவாளிகள் உட்பட 612 நபர்கள் இனி குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்..