1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Presenceless Registration Drives Major Revenue and Convenience in Tamil Nadu

ஆன்லைன் பத்திரப்பதிவில் புதிய புரட்சி.. 3 மாதங்களில் 1,03,705 ஆவணங்கள் பதிவு.. அரசுக்கு 1357.85 கோடி ரூபாய் வருவாய்..

ஆளில்லா ஆவணப் பதிவு
இனி சார்பதிவாளர் அலுவலகம் சென்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டிலிருந்தபடியே எந்நேரமும் ஆவணங்களை பதிவு செய்யும் 'ஆளில்லா ஆவணப்பதிவு' திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் கடந்த 17.08.2026 அன்று தொடங்கி வைத்தார். 
 
முதலில் மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு முதல் விற்பனை ஆவணங்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட இத்திட்டம், கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து வங்கி ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய பதிவுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
 
இதனால் புரோக்கர் செலவு, பயண அலைச்சல், லஞ்சம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரும்பும் நல்ல நேரத்தில் இணைய வழியாக ஆவணங்களைத் தாக்கல் செய்யவும், சமர்ப்பிக்கும் முன் திருத்தங்கள் செய்யவும், சொந்தமாக ஆவணங்களை உருவாக்கவும் பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 
 
17.08.2026 முதல் 17.11.2026 வரையிலான 90 நாட்களில் 1,03,705 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, 1357.85 கோடி ரூபாய் அரசு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நவம்பர் 5 முதல் மற்ற ஆவணங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட நிலையில், 19,850 ஆவணங்கள் பதிவாகியுள்ளன. எங்கிருந்தும் எளிதாகப் பதிவு செய்யும் 'Anywhere Registration' இலக்கை நோக்கிப் பதிவுத்துறை வேகமாகச் செயல்பட்டு வருகிறது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
பறவைக் காய்ச்சல் பீதி!.. கோழி இறைச்சி விற்பனை பாதிப்பு....